Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

இடிந்து விழும் நிலையில் உள்ள வீட்டை சீரமைக்க அனுமதி வேண்டும்: 121 வயது பாட்டி கோரிக்கை

வருசநாடு, அக். 8: மயிலாடும்பாறை அருகே, மூலக்கடை கிராமத்தைச் சேர்ந்தவர் சிவன்காளை மனைவி கருப்பாயி (121). இவருக்கு சொந்தமான வீடு மண் சுவரால் ஆனது. பழமையான இந்த வீடு கனமழையால் சேதமடைந்துள்ளதாகவும், நீர்க்கசிவு ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது. இந்த வீட்டை பராமரித்து சீரமைக்க வனத்துறை அதிகாரிகளிடம் அனுமதி கேட்டும், அவர்கள் தரவில்லை என கூறப்படுகிறது.

இது குறித்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். இந்நிலையில், தற்போது கடமலைக்குண்டு-மயிலாடும்பாறை ஒன்றியப் பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. வீடு இடிந்து விழும் முன், பராமரிப்பு பணிகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். 121 வயதான பாட்டியை பாதுகாக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.