தேனி, அக். 8: தேனி மாவட்டத்தில் புதிய ஐடிஐக்கள் தொடங்கவும் இருக்கின்ற ஐடிஐ களில் புதிய பிரிவுகளை துவக்கவும் வருகிற அக்.31ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார். இது குறித்து தேனி மாவட்ட கலெக்டர் வைத்திநாதன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ‘‘வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் கீழ் செயல்படும் பயிற்சி தலைமை இயக்ககம் சார்பில்,
புதிய தொழிற்பயிற்சி நிலையங்கள் தொடங்குதல் மற்றும் ஏற்கனவே செயல்பட்டு வரும் தொழிற்பயிற்சி நிலையங்களில் புதிய தொழிற்பிரிவுகள், அலகுகளை சேர்த்தல் ஆகியவற்றிற்கு விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன்படி, தேனி மாவட்ட விண்ணப்பதாரர்கள் https://affiliation-dgt.skillindiadigital.gov.in/ என்ற இணையதளம் மூலம் வருகிற அக்.31ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.


