Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சின்னமனூரில் காவல்நிலையம் முற்றுகை

சின்னமனூர், ஜூன் 6: சின்னமனூரில் சர்ச்சைக்குரிய வகையில் போஸ்டர் ஒட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி காவல்நிலையத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சின்னமனூர் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சர்ச்சைக்குரிய வகையில் போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது. இந்த போஸ்டர் ஒட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என முஸ்லிம் ஜமாத்தார்கள், சின்னமனூர் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்திருந்தனர்.

இந்நிலையில், அந்த புகார் குறித்து இதுவரை நடவடிக்கை எடுக்கப்படாததால நேற்று, சின்னமனூர் முஸ்லிம் ஜமாத்தார்கள் காவல்நிலையத்தை முற்றுகையிட்டனர். தொடர்ந்து விரைவில் நடவடிக்கை எடுக்க கோரி மேலும் புகார் மனு அளித்தனர். இது குறித்து விரைவில் நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளித்தை அடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.