Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஸ்ரீவிகாசா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தின விழா

உத்தமபாளையம், ஜூன் 6: உத்தமபாளையம் ஸ்ரீவிகாசா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், உலக சுற்றுச்சூழல் தின விழா கொண்டாடப்பட்டது. பள்ளி வளாகத்தில் நடந்த விழாவினை ராயப்பன்பட்டி ஆலிலை பசுமை இயக்கம் மற்றும் ஸ்ரீவிகாசா மெட்ரிக் மேல்நிலைபள்ளி இணைந்து நடத்தியது. பள்ளி தாளாளர் இந்திரா உதயகுமார், மரக்கன்றுகளை நட்டு விழாவினைத் தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து மாணவர்களுக்குப் பாரம்பரிய விதைகள் வழங்கப்பட்டு, மரங்கள் வளர்ப்பதன் அவசியம் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. இந்நிகழ்வில் பள்ளி முதல்வர்கள் குமரேசன், அகிலா தெரசா, மற்றும் பசுமைப்படை ஆசிரியர் செல்வக்குமார் ஆகியோர் கலந்துகொண்டனர். விழாவில் ஆலிலை பசுமை இயக்கத்தின் நிறுவனர் ஆலிலை மணிமாறன் மற்றும் அதன் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.