கம்பம், நவ. 5: கம்பம் மாலையம்மாள்புரத்தில் உள்ள தேங்காய் குடோன் அருகே கம்பம் வடக்கு எஸ்எஸ்ஐ பரமதுரை தலைமையிலான போலீசார் ரோந்து சென்றனர். அப்போது, சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த 2 வாலிபர்களை பிடித்து சோதனை செய்தனர்.
அவர்களிடம் 1 கிராம் மெத்தபெட்டமைன் என்ற போதைப்பொருள் இருப்பது தெரியவந்தது. அதனை பறிமுதல் செய்த போலீசார், நடத்திய விசாரணையில் அவர்கள் கம்பம் உலகத்தேவர் தெருவைச் சேர்ந்த பாலா (31), விஷ்வராகுல் (25) என்பது உறுதியானது. இதுகுறித்து வழக்குப்பதிவு ெசய்த போலீசார் இருவரையும் கைது செய்தனர்.


