Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ராணுவ வீரர் மாயம்

தேவதானப்பட்டி, பிப். 5: தேவதானப்பட்டி அருகே வேல்நகர் தெற்கு தெருவைச் சேர்ந்தவர் அன்பரசன்(31). இவர் கடந்த 10 ஆண்டுகளாக இந்திய ராணுவத்தில் பணி புரிந்து வருகிறார். அன்பரசனுக்கு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அபிராமி என்பவருடன் திருமணம் நடைபெற்று தற்போது 7 மாதத்தில் ஒரு குழந்தை உள்ளது.

இந்நிலையில் தற்போது விடுமுறைக்காக அன்பரசன் ஊருக்கு வந்துள்ளார். கடந்த 2ம் தேதி வீட்டின் மாடியில் தூங்க சென்றவர் மறுநாள் காலை காணவில்லை. இது பல இடங்களில் தேடியும் அவரை காணவில்லை. இது குறித்து அவரது தாய் அன்னமயில்(54) ஜெயமங்கலம் போலீசில் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து ராணுவ வீரர் அன்பரசனை தேடி வருகின்றனர்.