ஆண்டிபட்டி, ஜன.5: தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி மகேஸ்வர்தயாள் நேற்று முன்தினம் தேனி மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்டார். அதன் ஒரு பகுதியாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில், காவல் கண்காணிப்பாளர் சிநேகபிரியா முன்னிலையில் காவல் கூடுதல் கண்காணிப்பாளர் மற்றும் அனைத்து உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர்கள் கலந்து கொண்ட ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
அதில் ஏடிஜிபி மகேஸ்வர்தயாள், கொலை, ஆதாயக்கொலை, கற்பழிப்பு, போக்சோ மற்றும் இதர முக்கிய வழக்குகளை விரைந்து விசாரணை முடித்து 15 நாட்களுக்குள் தண்டனையில் முடிக்கப்பட வேண்டும் என்றார். மேலும் முக்கிய சட்டம் ஒழுங்கு பிரச்னைகள் குறித்து கலந்துரையாடினார்.
மாவட்டத்தின் முக்கிய கோயில் திருவிழாக்காளான வீரபாண்டி கௌமாரியம்மன் கோயில், மூங்கிலணை காமாட்சி அம்மன் கோயில் மற்றும் ஏனைய திருவிழாக்கள் குறித்தும் கலந்துரையாடினார். காவல் துறையில் பணிகள் குறித்து விரிவாக ஆய்வு செய்து அறிவுரை வழங்கினார்.


