Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

போடி அருகே தேங்கியுள்ள கழிவுநீர் வெளியேற வாறுகால் அமைக்க வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை

போடி, நவ. 4: போடி அருகே, புதுக்காலனியில் சாலையோரத்தில் வாறுகால் கட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். போடியில் இருந்து தேவாரம் செல்லும் சாலையில், சில்லமரத்துப்பட்டி மற்றும் சிலமலை கிராம ஊராட்சிகள் அடுத்தடுத்து உள்ளன. இதில் சில்லமரத்துப்பட்டியில் இருந்து சிலமலைக்கு செல்லும் சாலையில் புதுக்காலனி என்னும் குடியிருப்பு பகுதி உள்ளது. இங்கு 300க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன; 800க்கும் அதிகமான பொதுமக்கள் உள்ளனர்.

இந்த காலனி பகுதியில் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து தரவேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதையேற்று கடந்த திமுக ஆட்சியில் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் தேங்காமல் இருக்க வாறுகால் அமைக்கப்பட்டது. இந்த வாறுகால் பயன்பாட்டில் உள்ள நிலையில், ஒட்டு மொத்த கழிவுநீரும் தடையின்றி செல்ல காலனி நுழைவாயில் வரை கழிவுநீர் வாறுகால் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த கழிவுநீர் வாறுகால் குண்டும், குழியுமாக இருப்பதால் ஆங்காங்கே கழிவுநீர் தேங்குகிறது. இந்த நிலையில் புதுக்காலனியில் மெயின்ரோட்டில் கழிவு நீர் கடந்து செல்வதற்கு வசதியாக காலனி நுழைவாயில் அருகே சாலையோரம் பொக்லைன் இயந்திரம் உதவியுடன் பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. இங்கு வசிக்கும் மாணவ, மாணவியர் 100க்கும் மேற்பட்டோர், காலனி நுழைவாயில் அருகே நின்று பஸ் ஏறி பள்ளி, கல்லூரிகளுக்கு செல்கின்றனர்.

இவர்களுக்கு சாலையோரம் உள்ள பள்ளத்தில் தேங்கி நிற்கும் கழிவுநீரால், ஆபத்தும், சுகாதாரக்கேடும் ஏற்படும் அபாயம் உள்ளது. போடி ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் புதுக்காலனியில் சாலையோரம் வாறுகால் அமைக்க வேண்டும். மேலும், சாலையில் செல்லும் வாகனங்கள் ஒன்றுக்கொன்று முந்தும்போது, சாலையோர பள்ளத்தில் கவிழும் அபாயம் உள்ளது. எனவே, புதுக்காலனியில் சாலையோரம் வாறுகால் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.