Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

முதல் குழந்தை இறந்த நிலையில் கம்பம் பெண்ணுக்கு பிறந்த 2வது குழந்தையும் சாவு

கம்பம், நவ. 4: கம்பத்தை சேர்ந்த பெண்ணுக்கு ஏற்கனவே முதல் குழந்தை உயிரிழந்த நிலையில் 2வது குழந்தையும் இறந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கம்பம் உத்தமபுரத்தை சேர்ந்தவர் லோகநாதன்(31). இவரது மனைவி துர்காதேவி. இவர்களுக்கு கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. துர்காதேவி கடந்த ஆண்டு கர்ப்பமானார். அப்போது பிறந்த ஆண் குழந்தை 2 நாட்களில் உயிரிழந்தது.

இந்நிலையில் 2வது முறையாக கர்ப்பமடைந்த துர்காதேவி, கடந்த 31ம் தேதி கம்பம் அரசு மருத்துவனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு கடந்த 4 நாட்களுக்கு முன் ஆண் குழந்தை பிறந்தது. நேற்று முன்தினம் பிறந்து இரண்டு நாட்களே ஆன பச்சிளம் குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. இது குறித்து கம்பம் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஏற்கனவே முதல் குழந்தை இறந்த நிலையில், தற்போது 2வது குழந்தையும் உயிரிழந்தது குடும்பத்தினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.