Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
MSME
search-icon-img
Advertisement

மக்கள் நீதிமன்றம் உதவியுடன் சேதமடைந்த வாறுகால் ரூ.40 ஆயிரத்தில் சீரமைப்பு

தேனி, நவ. 4: குச்சனூர் பேரூராட்சியில் பொதுமக்கள் சார்பில் சேதமடைந்துள்ள வாறுகாலை சீரமைக்கக்கோரி. தேனி மக்கள் நீதிமன்ற நீதிபதி ரஜினியிடம் மனு அளித்தனர். இதனைத் தொடர்ந்து மக்கள் நீதிமன்றம் சார்பில் குச்சனூர் பேரூராட்சி செயல் அலுவலர் நேரில் ஆஜராக அழைக்கப்பட்டு, இருதரப்பினரிடமும் கலந்தாலோசனை நடத்தப்பட்டது.

அதனடிப்படையில் நீதிபதி ஆலோசனையின்படி, குச்சனூர் பேரூராட்சி நிர்வாகம் வாறுகால் உடைபட்ட பகுதியை ஆய்வு செய்து கழிவுநீர் வாறுகால் அமைப்பதற்கு ரூ.40 ஆயிரம் மதிப்பில் விரிவான திட்ட மதிப்பீடு தயார் செய்தது. இதையடுத்து அதற்கான நிதி ஒதுக்கப்பட்டு, சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு, பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. மேலும், பொதுமக்கள் பொதுசேவைக் குறைபாடு தொடர்பான பிரச்னைகளில் சிக்கியவர்கள், மக்கள் நீதிமன்றத்தை அணுகி விரைவான தீர்வைப் பெறலாம் என, நீதிபதி ரஜினி தெரிவித்துள்ளார்.