Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

பெண்ணுக்கு அரிவாள் வெட்டு

நத்தம், பிப். 4: நத்தம் அருகே பொய்யாம்பட்டியை சேர்ந்த ராமு மனைவி விஜயா (45). இவர்களது வீட்டின் அருகே ஜெகன் (25) வீடு கட்டி வருகிறார். இவரது வீட்டின் முன்புறம் விஜயா வீட்டு மின்சார வயர் சென்றுள்ளது. இதை இழுத்து கட்ட கூறி போது ஏற்பட்ட வாய் தகராறில் ஜெகனும், அவரது நண்பர் பிரபு (30)வும் சேர்ந்து விஜயாவை அரிவாளால் வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த விஜயா நத்தம் ஜிஹெச்சில் சேர்க்கப்பட்டு, அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக மதுரை ஜிஹெச்சிற்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதுகுறித்து நத்தம் போலீசார் விசாரிக்கின்றனர்.