Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மனைவியை தாக்கிய கணவன் மீது வழக்கு

தேவதானப்பட்டி, மார்ச் 2: தேவதானப்பட்டி அருகே மஞ்சளாறு அணை கிராமத்தை சேர்ந்த பவித்ரா (20) என்பவருக்கும், எழுவனம்பட்டியை சேர்ந்த மலைச்சாமி என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒரு வயதில் குழந்தை உள்ளது. இந்நிலையில் கணவன்- மனைவி இடையே கருத்து வேறுபாடு காரணமாக பவித்ரா அவரது அப்பா வீட்டில் இருந்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த பிப்.15ம் தேதி மஞ்சளாறு அணை கிராமத்திற்கு வந்த மலைச்சாமி தனது மனைவி பவித்ராவுடன் தகராறு செய்ததுடன், அவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதில் காயமடைந்த பவித்ரா சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து புகாரில் நேற்று தேவதானப்பட்டி போலீசார் மலைச்சாமி மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.