கூடலூர், டிச.10: கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் அடிமாலி பகுதியில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த மூன்று இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.
அடிமாலி போதை தடுப்பு சிறப்பு படைப்பிரிவு இன்ஸ்பெக்டர் ராகுல் சசி தலைமையிலான போலீசார் நடத்திய சோதனையில் சாத்துப்பாறை 14ம் மைல் அருகே 380 கிராம் கஞ்சாவுடன் மூன்று இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். போலீசாரிடம் பிடிபட்ட இளைஞர்களான சாத்துப்பாறையை சேர்ந்த அகிலேஷ், அபினவ் மற்றும் கூத்துபாறையை சேர்ந்த ஆல்வின் ஆகியோர் அடிமாலி,வெள்ளத்தூவல் உள்ளிட்ட பகுதிகளில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த நிலையில் போலீசாரால் கண்காணிக்கப்பட்டு தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.


