Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
MSME
search-icon-img
Advertisement

பெரியகுளம் அருகே தோட்டத்தில் பாம்பு கடித்த பெண் பலி

தேனி, செப். 30: பெரியகுளம் அருகே லட்சுமிபுரம் கோம்பை தோட்டப்பகுதியில் வேலை செய்த பெண், பாம்பு கடித்ததில் பரிதாபமாக பலியானார்.பெரியகுளம் அருகே டி.கள்ளிப்பட்டி மோதிலால் தெருவை சேர்ந்தவர் மாரிமுத்து(44). இவரது மனைவி . முத்துலட்சுமி(38). இவர் தோட்ட வேலைகளுக்கு கூலித்தொழிலாளியாக சென்று வருவது வழக்கம். இதன்படி கடந்த 26ம் தேதி லட்சுமிபுரம் அருகே கோம்பை தோட்டத்திற்கு கூலி வேலைக்கு முத்துலட்சுமி சென்றார். தோட்டத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது, அடையாளம் தெரியாத விஷப்பாம்பு முத்துலட்சுமியை கடித்தது.

இதையடுத்து உயிருக்கு ஆபத்தான நிலையில் முத்துலட்சுமி மீட்கப்பட்டு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பெண் முத்துலட்சுமி நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தார். இதுகுறித்து மாரிமுத்து அளித்த புகாரின் பேரில் பெரியகுளம் தென்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.