தேவதானப்பட்டி, செப். 30: தேவதானப்பட்டி அருகே ஜி.கல்லுப்பட்டியை சேர்ந்தவர் முத்துராஜ் (55). இவரும் இவரது உறவினர் பிச்சைமணி என்பவரும் அப்பகுதியில் உள்ள தனியார் குடோன் அருகே, நேற்று முன்தினம் நின்று பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த ஜி.கல்லுப்பட்டி இந்திரா காலனியை சேர்ந்த கருப்பையா (65) என்பவர் முத்துராஜிடம் தகராறில் ஈடுபட்டார். இது குறித்த புகாரின் பேரில் தேவதானப்பட்டி போலீசார் கருப்பையா மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
+
Advertisement


