Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement Tafe

விவசாயத்துடன் இணை தொழிலாக மீன் வளர்ப்பில் ஈடுபடலாம்

ஆண்டிபட்டி, ஜூலை 30: விவசாயத்துடன் இணை தொழிலாக மீன் வளர்ப்பிலும் விவசாயிகள் ஈடுபடலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவித்துள்ளதாவது: வேளாண்மைத் துறை மூலம் விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தில் விதைகள், உரங்கள், வேளாண் உபகரணங்கள், பண்னைக்குட்டைகள் அமைத்தல் போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதுடன் தற்பொழுது ஊரக வளர்ச்சித் துறையுடன் ஒருங்கிணைந்து தரிசு நிலங்கள் சீரமைத்து விவசாயிகளுக்கு விளை நிலங்களாக மாற்றி கொடுக்கப்படுகிறது.

தோட்டக்கலைத் துறையின் மூலம் அரசு மானியத்தில் பலவகை மரக்கன்றுகள் வழங்குவதுடன், நுண்ணீர் பாசனத் திட்டம், பண்ணைக்குட்டை அமைத்தல் போன்ற திட்டங்களை விவசாயிகளுக்கு வழங்கி வருகின்றன. தேனி மாவட்டத்தில் விவசாயப் பணிகள் மேற்கொள்வோர் அதன் இணைத்தொழிலாக பண்ணைக் குட்டையில் மீன் வளர்த்தால் ஆறு மாதத்தில் குறைந்தது ரூ.1 லட்சம் முதல் ரூ.1.50 லட்சம் வரை லாபம் பெறலாம். ஒவ்வொரு ஆண்டும் வேளாண்மைத் துறை மற்றும் அதன் ஒருங்கிணைந்த துறைகள் மூலம் அரசு வழங்கும் மானியத்திட்டம் குறித்து அறிந்து விவசாயிகள் பயன்பெற வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.