Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

கோம்பை - பாளையம் இடையே சாலைகளில் ஒளிரும் விளக்குகள் இல்லை

தேவாரம், ஜூன் 30: கோம்பை பாளையம் சாலைகளில் விபத்துகளை தடுக்க சாலையோர மரங்களில் சிகப்பு ஒளிரும் விளக்குகள் பதிக்கப்பட வேண்டும். உத்தமபாளையம் -கோம்பை - தேவாரம் செல்லும் சாலைகள் இருவழிச் சாலைகளாக உள்ளன இரண்டு புறமும் அதிகமான அளவில் புளிய மரங்கள் இருக்கிறது இதே போல் இப்போதுகளில் தினந்தோறும் அதிகமான அளவில் உள்ளூர் வாகனங்கள் பள்ளி வாகனங்கள் அரசு மற்றும் தனியார் பேருந்துகள், டூவீலர்கள் செல்கின்றன. இரவு நேரங்களில் ஆபத்தான இடங்கள் குறித்து அறியாமல் வாகன ஓட்டிகள் செல்வதால் அடிக்கடி விபத்துகள் நடந்து வருகிறது.

இதனை அடுத்து அதிக விபத்து ஏற்படும் இடங்களை கண்டறிந்து உத்தமபாளையம் - போடி மாநில நெடுஞ்சாலைத்துறை சார்பில் ஒளிரும் விளக்குகள் பதிக்கப்பட வேண்டும். இல்லாவிட்டால் அதிகமான அளவில் சாலை விபத்துகள் நடைபெற வாய்ப்புகள் உண்டாகும். எனவே சாலைகள் மற்றும் புளிய மரங்களில் ஒளிரும் சிகப்பு நிற ஸ்டிக்கர்கள், வைட்கள் பதிக்கப்பட வேண்டும் என வாகனஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர்.