Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

பீர்மேடு அருகே கார்கள் மோதலில் 6 பேர் காயம்

கூடலூர், ஆக. 29: கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர்கள் சேத்ரன் கவுடா (38), தீபக் (20), ரோஹித் (18). இவர்கள் கேரள மாநிலம் ஐயப்பன் கோயிலில் தரிசனம் செய்வதற்கு காரில் சென்றனர். அங்கு சாமி தரிசனம் செய்தபின், நேற்று முன் தினம் பிற்பகல் மீண்டும் காரில் கர்நாடகாவுக்கு புறப்பட்டனர். பீர்மேடு அருகே 55ம் மைல் பகுதியில் மதியம் 3 மணியளவில் சென்றபோது, வண்டிப்பெரியாறு பகுதியில் இருந்து வந்த கார் ஒன்று எதிர்பாராதவிதமாக ஐயப்ப பக்தர்கள் கார் மீது மோதியது. இதில் 2 கார்களும் பலத்த சேதமடைந்தன.

இதில் இரு கார்களின் இடிபாடுகளில் சிக்கி, சேத்ரன் கவுடா, தீபக், ரோஹித் ஆகியோரும், மற்றொரு காரில் வந்த பீர்மேடு அருகே உள்ள லாட்ரம் பகுதியைச் ஆன்டனி ராஜூ (47), மஞ்சுளா தேவி (37), ரோபின் (13) ஆகிய 6 பேரும் காயமடைந்தனர். அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு, பீர்மேடு தாலுகா மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். தகவலறிந்து வந்த பீர்மேடு போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் விபத்தில் சேதமடைந்த இரு கார்களையும் அப்புறப்படுத்தினர். விபத்து காரணமாக கொட்டாரக்கரா-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.