Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

மயங்கி விழுந்தவரால் பரபரப்பு

வருசநாடு, செப். 28: மேகமலை விவகாரம் தொடர்பாக நடந்து வரும் காத்திருப்பு போராட்டத்தில், கோவில்பாறை கிராமத்தைச் சேர்ந்த வாலிபர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

மேகமலை புலிகள் காப்பக விவகாரத்தில் 98 மலை கிராம மக்களை வெளியேற்றும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, கடமலைக்குண்டு பேருந்து நிறுத்தத்தில் 2வது நாளாக நேற்று ஆயிரக்கணக்கான மக்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போராட்டத்தில், தங்கம்மாள்புரம் ஊராட்சிக்கு உட்பட்ட கோவில் பாறை கிராமத்தைச் சேர்ந்த ராமசாமி மகன் மணிகண்டன்(45) என்பவர் திடீரென மயங்கி கீழே விழுந்தார். இதனால் போராட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இந்த தகவலை அறிந்த காவல்துறை அதிகாரிகள் அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் கடமலைக்குண்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அழைத்துச் சென்று தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்தனர்.