Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement Tafe

முதியவர் விஷம் குடித்து தற்கொலை

தேவதானப்பட்டி, ஜூலை 28: தேவதானப்பட்டி அருகே சில்வார்பட்டி வடக்கு தெருவை சேர்ந்தவர் கர்ணன் (60). இவர் இதே பகுதியில் சுமார் 50 சென்ட் நிலத்தை கடந்த 50 ஆண்டுகளாக அனுபவத்தில் வைத்து மரங்கள் நடவு செய்து பராமரித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் அந்த இடத்தை தங்களுக்கு சொந்தமானது என்று கூறி சிலர் அவருடன் பிரச்னை செய்து வந்ததாக தெரிகிறது.

இதனால் மணமுடைந்த கர்ணன் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து இரு தினங்களுக்கு முன் விஷம் குடித்தார். இதனால் உயிருக்கு போராடிய அவரை உறவினர்கள் மீட்டு, பெரியகுளம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கர்ணன் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த மரணம் குறித்து தேவதானப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.