Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

உத்தமபாளையம் அருகே கண்மாய்களில் அனுமதியின்றி மண் அள்ளும் நடவடிக்கை: பொதுப்பணித்துறை கவனிக்குமா?

உத்தமபாளையம். ஜூலை 27: உத்தமபாளையம் அருகே தாமரைகுளம் கண்மாயில்அனுமதியின்றி அதிக அளவில் கரம்பை மண் அள்ளிச்செல்வதை பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் என்று விவசாயிகள் தரப்பில் கோரிக்கை எழுந்துள்ளது. உத்தமபாளையம் அருகே உள்ள ராமசாமிநாயக்கன்பட்டி - கோகிலாபுரம் பகுதியில் உள்ள தாமரைக் குளம் கண்மாய், சுமார் 1000 ஏக்கருக்கு மேல் பரந்து விரிந்துள்ளது. இக்கண்மாயில் தற்போது அதிகமான அளவில் கரம்பை மண் அனுமதியின்றி அள்ளப்படுகிறது. பொதுப்பணித்துறை (நீர்வள ஆதாரம்) கட்டுப்பாட்டில் உள்ள இக்கண்மாய், ஆண்டுதோறும் பெய்யும் மழை, மற்றும் முல்லைப் பெரியாறு அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரால் நிரம்புவது வழக்கம்.

இந்த தண்ணீர் உதவியுடன் சுமார் 300 ஏக்கருக்கும் மேல் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. தற்போது தென்மேற்கு பருவமழை ஏமாற்றிய நிலையில், கண்மாய் வறண்டு காணப்படுகிறது. இதனால் அதிலிருந்து அதிக அளவில் அனுமதியின்றி கரம்மை மண் அள்ளப்பட்டு, தனியார் செங்கல் சூளைகளுக்கும், புதிய கட்டிடங்களுக்கும் விற்பனையாகி வருகிறது. பொதுப்பணித்துறை அதிகாரிகள் இதனை கண்டுகொள்ளாமல் இருப்பதால் நாள்தோறும் நூற்றுக்கணக்கான டிராக்டர்களில் கரம்பை மண் அள்ளப்படுகிறது. பொதுவாக கண்மாய்களின் நிலத்தடி நீர்மட்டம் உயர்வதற்கு, கரம்பை மண் அவசியம். ஆனால் இதனை சுரண்டும் நபர்களின் கைவரிசை அளவில்லாமல் இருக்கிறது. எனவே இந்த நடவடிக்கைக்கு அதிகாரிகள் உடனடியாக தீர்வு காண வேண்டும் என விவசாயிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விவசாய நிலங்களின் ேமம்பாட்டிற்கு கண்மாய்களில் மண் அள்ளுவதற்கு அனுமதி வழங்கப்படுகிறது. இதனை முறைகேடாக பயன்படுத்துவோர் மீது அதிகாரிகள் உரியநடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.