தேனி, செப். 26: தேனி மாவட்டத்தில் உள்ள நிறுவனங்களில் பிரதம மந்திரி தேசிய இன்டர்ன்ஷிப் பயிற்சித் திட்டத்தின் கீழ் இளைஞர்களுக்கு 6 முதல் 9 மாத காலம் உதவித்தொகையுடன் அளிக்கப்படும் பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் வைத்திநாதன் தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தேனி மாவட்டத்தில் உள்ள நிறுவனங்களில் பிரதம மந்திரி தேசிய இன்டர்ன்ஷிப் பயிற்சி திட்டத்தின் மூலம், இளைஞர்களுக்கு 6 முதல் 9 மாத காலம் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.
இப்பயிற்சிக்கு விண்ணப்பிப்போர் 18 வயது முதல் 25 வயதுக்குள் இருக்க வேண்டும் என வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இப்பயிற்சியில் சேர ஐடிஐ, பத்தாம் வகுப்பு, 12ம் வகுப்பு, டிப்ளமோ, பட்டப்படிப்புகள் படித்தவர்கள் http://www.pminternship.mca.gov.in/ என்ற இணைய தளமுகவரி மூலமாக விண்ணப்பிக்கலாம்.


