Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

குப்பை கொட்டப்பட்ட இடத்தில் சாலையோர பூங்கா அமைப்பு

தேனி, செப். 26: தேனி அருகே நாகலாபுரம் ஊராட்சியில் சாலையோரம் குப்பைகள் கொட்டப்பட்ட இடத்தில் குப்பைகளை அகற்றி சாலையோரப் பூங்கா அமைக்கப்பட்டது. தேனி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட நாகலாபுரம் ஊராட்சியில், நாகலாபுரம் மற்றும் கோபாலபுரம் கிராமங்களில் சாலையோரம் குப்பைகள் கொட்டப்பட்டு வந்தது. இதனால் அப்பகுதி சுகாதாரமற்ற நிலையில் காணப்பட்டது. இந்நிலையில், மாவட்ட கலெக்டரின் உத்தரவுப்படி குப்பைகள் கொட்டப்பட்ட இடங்களில் இருந்த குப்பைகள் அகற்றப்பட்டு, சாலையோர பூங்கா அமைக்கும் பணியை ஊராட்சி நிர்வாகம் மேற்கொண்டது.

இப்பணியானது தேனி மாவட்ட ஊராட்சிகள் உதவி இயக்குநர் வெங்கடேஷ்வரன் தலைமையில், தேனி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சரவணன், மைதிலி ஆகியோர் முன்னிலையில் நடந்தது. அப்போது சாலையோர பூங்கா அமைக்கப்பட்டு அப்பகுதியில் மரக்கன்றுகள் நடப்பட்டன. இதில் ஊராட்சி ஒன்றிய மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் தனலட்சுமி, திட்ட ஒருங்கிணைப்பாளர் மணிவண்ணன் ஊராட்சி செயலர் சுருளி மற்றும் பணியாளர்கள் உடனிருந்தனர்.