தேனி, செப். 26: தேனி மாவட்டத்தில் கடந்த ஒரு மாத காலமாக காய்ச்சல் பரவ தொடங்கியுள்ளது. இதனால் தேனி மாவட்டத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளில் காய்ச்சல் பாதிப்புக்காக சுமார் 2 ஆயிரம் பேர் புறநோயாளிகளாக சிகிச்சை பெற்றுள்ளனர். இவர்களில் சுமார் 500 பேர் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் ஏற்கனவே 15 நபர்களுக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டு சிகிச்சை பெற்று குணமடைத்தனர்.
இந்நிலையில் தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது பெய்து வரும் மழையின் காரணமாக காய்ச்சல் பாதிப்பு பரவ தொடங்கியுள்ளது. இதன் காரணமாக மாவட்டத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகளில் காய்ச்சலுக்காக சிகிச்சை பெறுபவரின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதில் 15 பேருக்கு தற்போது டெங்கு பாதிப்பு ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


