Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

கூடலூர் ஓடையில் தொழிலாளி சடலம் டூவீலருடன் மீட்பு

கூடலூர், ஆக.26: கூடலூர் கோட்டை கருப்பசாமி கோயில் தெருவைச் சேர்ந்த மூக்கையா மகன் ராசா (60), வயல்கள் மற்றும் தோட்டங்களுக்கு தண்ணீர் பாய்ச்சும் கூலி வேலை செய்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு கடைக்குச் சென்ற அவர் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால், குடும்பத்தினர் அவரை பல்வேறு இடங்களில் தேடி வந்தனர். இந்நிலையில், நேற்று காலை தாமரைக்குளம் விதைப்பண்ணைக்கு செல்லும் வழியில் உள்ள ஓடையில் இருசக்கர வாகனத்துடன் ராசா சடலமாக கிடப்பது தெரியவந்தது. தகவலறிந்த கூடலூர் தெற்கு போலீசார் அவரது உடலை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக கம்பம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து, ராசாவின் மரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.