ஸ்ரீவில்லிபுத்தூர், ஆக.28: நெசவாளர்களுக்கு தொடர்ச்சியான வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஸ்ரீவில்லிபுத்தூரில் நெசவாளர்கள் தர்ணா போராட்டம் நடத்தினர். நெசவாளர்களுக்கு தரமான நூல்கள் வழங்க வேண்டும். தொடர்ச்சியாக வேலை வாய்ப்பு வழங்க வேண்டும். புதிய ரக உற்பத்தி சேலைக்கு நெசவுக்கு முந்தைய செலவினங்களை அரசே ஏற்க வேண்டும். புதிய ரக உற்பத்தி சேலைக்கு உரிய நியாயமான கூலி நிர்ணயம் செய்வதை நெசவாளர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஸ்ரீவில்லிபுத்தூரில் நேற்று மாலை ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய சொசைட்டி முன்பு நெசவாளர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த தர்ணா போராட்டத்தில் ஆண், பெண் நெசவாளர்கள் திரளாக பங்கேற்றனர். நெசவாளர் முன்னேற்ற தொழிலாளர்கள் சங்கம் சார்பில் நடைபெற்ற இந்த தர்ணா போராட்டத்தில் தலைவர் சுந்தர மகாலிங்கம், செயலாளர் அழகர், பொருளாளர் முருகன், துணைத்தலைவர் சிவப்பிரகாசம், துணை செயலாளர் பங்கேற்றனர். மேலும் கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பியபடி, நெசவாளர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.



