Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

அருப்புக்கோட்டை,ஆக.28: மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு இருப்பதுபோல் வங்கி ஊழியர்களுக்கும் ஐந்துநாள் வேலை, இரண்டுநாள் விடுமுறை என்ற ஒற்றை கோரிக்கையின் கீழ் அனைத்து வங்கி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக அருப்புக்கோட்டை ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா கிளை முன்பு கடந்த 12ம் தேதி ஆர்ப்பாட்டம் நடந்தது. அதன் தொடர்ச்சியாக அதே கோரிக்கையை முன்னிறுத்தி மீண்டும் அனைத்து வங்கி ஊழியர் சங்கம் கூட்டமைப்பு சார்பாக ஸ்டேடட் பேங்க் ஆப் இந்தியா கிளை முன்பு நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா ரமேஷ் தலைமை வகித்தார். வங்கி ஊழியர்களின் அதிகப்படியான வேலை சுமை மற்றும் வங்கிகளில் ஆட்குறைப்பு காரணமாக வங்கிகளில் பணிபுரியும் அலுவலர்களுக்கு பணிச்சுமையும் மனச்சோர்வும் ஏற்படுகிறது.

அதை குறைக்க ஐந்து நாட்கள் வேலை என்ற கோரிக்கை வலியுறுத்தியும், ஊக்கத் தொகையை அனைத்து ஊழியர்களுக்கும் வழங்கவேண்டும் என்றும் ஆர்ப்பாட்டம் செய்தனர். மேலும் ஆர்ப்பாட்டத்தில் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா கதிர்வேல், கரூர் வைஸ்யா பேங்க் ராஜா, யூனியன் பாங்க் ஆப் இந்தியா ராஜசிம்மன் உட்பட அனைத்து வங்கி ஊழியர்கள் கலந்து கொண்டனர்.