Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

சைபர் கிரைம் வழக்குகள் காவல் நிலையங்களில் பதிவு செய்ய உத்தரவு: 2 நாட்களில் 17 பதிவானது

தேனி, ஆக. 26: மாவட்டத்தில் எஸ்பி உத்தரவின்பேரில், அனைத்து காவல் நிலையங்களிலும் சைபர் குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருகிறது. தேனி மாவட்டத்தில் சைபர் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. செல்போன் திருட்டு, ஆன்லைன் மோசடி, டிஜிட்டல் கைது எனக் கூறி பண மோசடியில் ஈடுபடும் சைபர் குற்ற சம்பவங்கள் மாவட்டத்தில் படிப்படியாக அதிகரித்து வருகிறது. இத்தகைய குற்றச் சம்பவங்களில் பாதிக்கப்பட்ட பொதுமக்களிடம் இருந்து புகார் பெற்று வழக்கு பதிவு செய்வதற்காக தேனியில் உள்ள எஸ்பி அலுவலக வளாகத்தில் சைபர் குற்றப்பிரிவு செயல்பட்டு வருகிறது. சைபர் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், சைபர் குற்றப்பிரிவில் மட்டுமே வழக்குகளை பதிவு செய்து விசாரிப்பது என்பது பெரும் சிரமமாக மாறி உள்ளது.

இதையடுத்து மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் சைபர் குற்றங்கள் சம்பந்தமான புகார்களை பாதிக்கப்பட்டவர்கள் அளித்தால், அவற்றை பெற்றுக்கொண்டு, அந்தந்த காவல் நிலையங்களில் உள்ள எஸ்ஐக்கள் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று, எஸ்பி பிரவீன் கௌதம் உத்தரவிட்டார். இதன்படி கடந்த இரண்டு நாட்களாக அனைத்து காவல் நிலையங்களிலும். சைபர் குற்றங்கள் தொடர்பான வழக்குகள் பதிவாகி வருகின்றன.

இதன்படி கடந்த 2 நாட்களில் 17 சைபர் குற்ற வழக்குகள் பதிவாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.