சாத்தூர், ஆக.28: சாத்தூர் தாலுகாவில் கிராம நிர்வாக அலுவலர்கள் மொத்தம் 37 பேரும், கிராம உதவியாளர்கள் 39 பேர் பணியில் உள்ளனர். ஆனால் மடத்துக்காடு, பாப்பாகுடி, சிறுக்குளம் ஆத்திப்பட்டி, படந்தால், போத்திரெட்டிபடி மற்றும் சில கிராம உதவியாளர்கள் தங்கள் கிராம நிர்வாக அலுவலகம் செல்லாமல் சாத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து வருவதால் பொதுமக்கள் சான்றிதழ்கள் மற்றும் அலுவலக வேலை சம்பந்தமாக கிராம உதவியாளர்களை சந்திக்க வேண்டும் என்றால் பொதுமக்கள் பணம் செலவு செய்து ஒரு நாள் முழுவதும் நேரத்தை வீனாக்கி சாத்தூர் வந்து செல்லவேண்டிய நிலையுள்ளது.
மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுத்து கிராம உதவியாளர்களை தங்கள் பகுதியில் உள்ள அலுவலகத்தில் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.



