Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

முருங்கை பீன்ஸ் விலை அதிகரிப்பு

வருசநாடு, ஜூன் 26: மயிலாடும்பாறை அருகே அருகவெளி, கருமலைசாஸ்தாபுரம், மூலக்கடை, உப்புத்துறை, கருப்பையாபுரம், தங்கம்மாள்புரம், தர்மராஜபுரம், வருசநாடு, சிங்கராஜபுரம் பசுமலைத்தேரி உள்ளிட்ட கிராமங்களில் முருங்கை பீன்ஸ் சாகுபடி அதிக அளவில் நடைபெற்று வருகிறது. போதுமான அளவு மழை பெய்துள்ளதால் இந்த சீசனில் முருங்கை பீன்ஸ் உற்பத்தி அதிக அளவில் காணப்படுகிறது. மேலும் முருங்கை பீன்ஸ் விலையும் சந்தையில் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். கடந்த மாதம் சந்தைகளில் ரூ.60க்கு விற்பனையாகி வந்த 1 கிலோ முருங்கைபீன்ஸ் தற்போது ரூ.80 முதல் ரூ.90க்கு விற்பனையாகி வருகிறது.

வெளி மாவட்டங்களில் இருந்து வரத்து குறைவாக உள்ளதால் சந்தைகளில் பீன்ஸ் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளது. இதற்கிடையே கடமலை-மயிலை ஒன்றிய கிராமங்களில் அதிகாலை நேரம் தற்போது கடும் பனிப்பொழிவு காணப்படுகிறது. அதன் காரணமாக முருங்கை பீன்ஸ் கொடிகளுக்கு மஞ்சள் நோய் தாக்கி வருகிறது. நவி தோட்டக்கலை துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து முருங்கை பீன்ஸ் கொடிகளுக்கு பரவும் மஞ்சள் நோய் தாக்கத்தை கட்டுப்படுத்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.