Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சுற்றுலா பஸ் டிரைவர் மீது தாக்குதல்: 7 பேர் மீது வழக்கு

போடி, மே 25: போடி அருகே சுற்றுலா பஸ் டிரைவர், கண்டக்டரை தாக்கிய ஏழு பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கேரள மாநிலம் மூணாறில் இருந்து சுற்றுலா பேருந்து ஒன்று, டாப் ஸ்டேஷன் வரைல் 46 பயணிகளுடன் சென்றது. பேருந்தினை கேரள மாநிலம் மீனாம்பாலம், புதன்குளத்தைச் சேர்ந்தவர் மோகனன் சைஜி (42) என்பவர் ஓட்டிச் சென்றார். டாப் ஸ்டேஷன் சென்றடைந்த பேருந்து, முன்னால் நின்ற பஸ் காரணமாக குறிப்பிட்ட இடத்திற்கு செல்ல முடியாததால் அதற்கு முன்னதாகவே பேருந்தை நிறுத்தி பயணிகள் அனைவரையும் இறக்கி விட்டனர்.

அப்போது அந்த பஸ்ஸில் பயணிகளாக இருந்த டாப் ஸ்டேஷனை சேர்ந்த வினோத், ரித்திக், டேவிட் மற்றும் சிலர், பேருந்தை முன்னதாகவே நிறுத்தி இறக்கி விட்டதால் ஆத்திரம் அடைந்து டிரைவர் மற்றும் நடத்துநர் இன்சாம் ஆகியோரை தாக்கியதாக கூறப்படுகிறது.  இது தொடர்பான புகாரின் பேரில், போடி குரங்கணி காவல் நிலைய போலீசார், 7 பேர் மீது வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்