Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தேவாரம் சுற்றுவட்டாரங்களில் ஆடு விற்பனை சூடுபிடித்தது

தேவாரம், மே 25: தேனி மாவட்டம், உத்தமபாளையம், சின்னமனூர், போடி, பெரியகுளம், கூடலூர், தேவாரம் அதனை சுற்றியுள்ள லட்சுமி நாயக்கன்பட்டி, அழகர் நாயக்கன்பட்டி, தே.மீனாட்சிபுரம், தம்மி நாயக்கன்பட்டி, மேலசிந்தலைச்சேரி, தே.சிந்தலைச்சேரி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அதிகமான அளவில் ஆடு வளர்ப்பு தொழில் நடைபெற்று வருகிறது. ஆடுகளை வளர்த்து இதனை மொத்தமாக இறைச்சிக்காக விற்பனை செய்வது வழக்கமாக இருக்கிறது. வரும் 28ம் தேதி பக்ரீத் பண்டிகை என்பதால், ஆடு விற்பனை களைகட்டியது. குர்பானி கொடுப்பதற்காக இஸ்லாமியர்கள் அதிகளவில் ஆடுகளை வாங்கிச் செல்கின்றனர். மேலும் போடி, பெரியகுளம், கூடலூர் உள்ளிட்ட பகுதிகளில் ஆடுகளை வெளிமாவட்ட வியாபாரிகள் மொத்தமாகவும் வாங்கிச் செல்வதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.