Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

இயக்குனர் பாரதிராஜா பெயரில் திரைப்பட கல்லூரி தொடங்க வேண்டும்: முதல்வரிடம் கம்பம் எம்எல்ஏ கோரிக்கை

உத்தமபாளையம்: முதல்வர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு அவரை நேரில் சந்தித்து கம்பம் எம்எல்ஏ ஜெகநாத் மிஸ்ரா வாழ்த்து தெரிவித்து கோரிக்கை மனு அளித்தார். அந்த மனுவில், தமிழ் திரையுலகில் கிராமத்து வாழ்க்கையையும், உறவுகளின் உணர்வுகளையும் தத்ரூபமாக படம் பிடித்து தனித்த முத்திரை பதித்தவர் இயக்குனர் இமயம் பாரதிராஜா. பெண் சிசுக்கொலை போன்ற சமூக அவலங்களுக்கு எதிராக பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கருத்தம்மா திரைப்படத்தை உருவாக்கி தேசிய விருதும் பெற்றார்.

இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் புகழை போற்றும் வகையில் தேனியில் அவருக்கு மணிமண்டபம் அமைக்க வேண்டும். மேலும், பாரதிராஜ பெயரில் கம்பம் தொகுதிக்குட்பட்ட பகுதியில் திரைப்படக் கல்லூரியும் தொடங்க வேண்டும். மறைந்த பாரதிராஜாவுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடத்தி மரியாதை செலுத்திய தமிழக முதலமைச்சர் விஜய்க்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.