Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

கடமலைக்குண்டுவில் செப்.26ல் காத்திருப்புப் போராட்டம்

வருசநாடு, செப். 23: கடமலை-மயிலை ஒன்றியத்திற்குட்பட்ட வருசநாடு, மேகமலை, தும்மக்குண்டு, சிங்கராஜபுரம், நரியூத்து, பொன்னம்படுகை, தங்கம்மாள்புரம், முறுக்கோடை, மூலக்கடை ஆகிய 9 ஊராட்சிகளைச் சேர்ந்த 98 மலைக்கிராமங்களில் வெளியேற்றும் விவகாரத்தில், பல்வேறு தரப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பும், பொதுமக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பது குறித்து மாபெரும் போராட்டம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, நேற்று தேனி பங்களாமேட்டில் விவசாயிகள் மற்றும் வன உரிமை மீட்புக் குழுவின் சார்பில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

மலைக்கிராம பொதுமக்கள், தங்களின் போராட்டங்களை மேலும் தீவிரப்படுத்த முடிவு செய்துள்ளனர். அதன்படி, கடமலைக்குண்டு - மயிலாடும்பாறை ஒன்றியத்திற்குட்பட்ட 9 ஊராட்சிகளிலும் வன உரிமைக் குழுக்களை அமைத்து, அதன் மூலம் வருகிற செப்.26ம் தேதி கடமலைக்குண்டு கிராமத்தில் மாபெரும் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.  பொதுமக்களுக்குச் சாதகமான உச்ச நீதிமன்றத்தின் மறுதீர்ப்புகள் வரும் வரை இரவு பகலாகப் போராட்டம் நடத்துவது என வன விவசாயிகளும் வன உரிமை மீட்புக் குழுவும் தீர்மானம் நிறைவேற்றி அறிவித்துள்ளனர்.