Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தேனி என்.எஸ்.இன்ஜி.கல்லூரி மாணவருக்கு பணி நியமன ஆணை வழங்கல்

தேனி, ஜூலை 23: தேனி நாடார் சரசுவதி பொறியியல் கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கான உள்வளாகத் தேர்வு நடந்தது. இதில் மாலத்தீவு ஃபேர் டிரேடு லிங்க் பிரைவேட் லிமிடெட் பன்னாட்டு நிறுவனம் மனித வள மேம்பாட்டு அலுவலர் பணிக்கு இக்கல்லூரியில் கணிப்பொறியியல் துறை மாணவர் அகிலன் அழகர்சாமி வருடத்திற்கு ரூ.4.50 லட்சம் சம்பளத்திற்கு தேர்வு செய்யப்பட்டார். பன்னாட்டு நிறுவனத்தில் மனித் வள மேம்பாட்டு அலுவலர் பணிக்கு தேர்வு செய்யப்பட்ட மாணவரை தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறைத் தலைவர் தர்மராஜன், உபதலைவர் ஜீவகன், பொருளாளர் எம்.எம்.ஆனந்தவேல், பொருளாளர் ராமச்சந்திரன், கல்லூரி செயலாளர் சோமசுந்தரம், இணை செயலாளர் சுப்ரமணி, கல்லூரி முதல்வர் மதளைசுந்தரம் ஆகியோர் மாணவர் அகிலன் அழகர்சாமிக்கு பணிநியமன ஆணையை வழங்கி பாராட்டினர்.