Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

உரிய விலை நிர்ணயிக்க கோரி தேங்காய்களை வீதியில் உடைத்து ஆர்ப்பாட்டம்

தேனி, ஜூன் 23: தேங்காய்க்கு உரிய விலை நிர்ணயிக்க வலியுறுத்தி விவசாயிகள் தேங்காய்களை வீதியில் எறிந்தும், உடைத்தும் ஆர்ப்பாட்டத்தில் நடத்தினர். தமிழ்நாடு தென்னை விவசாய சங்கம் சார்பில் தேங்காய்க்கு உரிய விலை நிர்ணயிக்க கோரி தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. போராட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க தலைவர் முருகன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் அம்சராஜன் மாவட்ட பொருளாளர் சுப்பையா முன்னிலை வைத்தனர். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் கண்ணன் மற்றும் விவசாயிகள் சங்க மாநில குழு உறுப்பினர் ராஜப்பன் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர் .

ஆர்ப்பாட்டத்தின் போது, உரித்த தேங்காய் கிலோ ரூ.60க்கும், உரிக்காத தேங்காய் கிலோ ரூ.30 மற்றும் கொப்பரை கிலோ ரூ.180க்கும் தமிழக அரசு நிரந்தர விலை நிர்ணயிக்க வேண்டும், விவசாயிகள் விளைவித்த தேங்காயை அரசே நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தேங்காயை உடைத்தும், வீதியில் எறிந்தும் தங்களது எதிர்ப்புகளை தெரிவித்தனர். ஆர்ப்பாட்டத்தில், சுமார் 50க்கும் மேற்பட்ட தென்னை விவசாயிகள் கலந்து கொண்டனர்.