Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

சரிந்து வரும் காட்டன் தொழில்; ரூ.2 கோடியாக குறைந்தது வர்த்தகம் காக்க தனி வாரியம் தேவை

தேனி, மே 23: தேனி மாவட்டத்தில் மீண்டும் பருத்தி விளைச்சலை மேம்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தேனி மாவட்டம் இயற்கை எழில் சூழ்ந்த மேற்குத் தொடர்ச்சிமலை அடிவாரத்தில் அமைந்துள்ளது. இம்மாவட்டத்தில் வேளாண்மை பயிர்சாகுபடி, தோட்டப்பயிர் சாகுபடி எந்த அளவிற்கு உள்ளதோ அந்த அளவிற்கு பணப்பயிர்களின் உற்பத்தியிலும் சிறந்து விளங்கி வருகிறது. பணப்பயிர்களில் முதன்மையானதாக கருதப்படுவது பருத்தி எனலாம். இந்த பருத்தியானது, இந்திய வர்த்தகத்தில் வெள்ளைத் தங்கம் என பெருமையாக அழைக்கப்படுகிறது. பருத்திக்கான நாற்று நடவு முதல் பருத்தி விளைச்சலுக்கு பின் நூல் உற்பத்தி எனத் தொடங்கி முடிவுப் பொருளாக துணியாகி கிழிந்து மக்கி மண்ணோடு மண்ணாகி போகும் வரை பலருக்கு வேலைவாய்ப்பினை உருவாக்கித் தருவதாக பருத்தி விவசாயம் இருந்து வருகிறது.