Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

மணல் திருட்டால் நிலத்தடிநீர் பாதிப்பு

தேவதானப்பட்டி, ஜூலை 20: தேவதானப்பட்டி முருமலையில் இருந்து பெரிய ஓடை தர்மலிங்கபுரம், கதிரப்பன்பட்டி, சில்வார்பட்டி, வழியாக ஜெயமங்கலம் வேட்டுவன்குளம் கண்மாய்க்கு செல்கிறது. இதே போல் டி.வாடிப்பட்டி, எருமலைநாயக்கன்பட்டியில் இருந்து ஓடைகள் வேட்டுவன்குளம் கண்மாய்க்கு செல்கிறது. இந்த ஓடைப்பகுதிகளில் கடந்த காலங்களில் மணல்திருட்டு அதிகரிக்கப்பட்டு ஓடைகளில் மணல் இல்லாத நிலைமை தற்போது உள்ளது. இந்நிலையில் வேட்டுவன்குளம் கண்மாய் முகப்பு பகுதியில் மணல் திட்டுக்கல் உள்ளது. இந்த மணலை எருமலைநாயக்கன்பட்டியில் டிராக்டர் மூலம் தொடர்ந்து இரவு நேரங்களில் திருடிவருவதாக விவசாய சங்கங்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

தொடர்ந்து மணல் திருடப்பட்டுவருவதால் மழைக்காலங்களில் மழைநீர் தேங்காமல் செல்வதால் நிலத்தடிநீர் பாதிப்படைகிறது. இதே போல், வேட்டுவன்குளம் கண்மாய் அருகே உள்ள வண்ணான்கரடு பகுதியில் ஜேசிபி மூலம் இரவு நேரங்களில் டிராக்டர்களில் கிராவல் மண் திருடி வருவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். ஆகையால் வருவாய்த்துறை அதிகாரிகள், போலீசார் வேட்டுவன்குளம் கண்மாய் பகுதியில் மணல் மற்றும் கிராவல்மண் திருடப்பட்டுவரும் இடத்தை ஆய்வு செய்து அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து மணல் திருட்டை தடுக்க வேண்டும் என விவசாயசங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.