Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement Tafe

வைகை அணை பூங்கா வெறிச்

ஆண்டிபட்டி, ஜூலை 20: ஆண்டிபட்டி அருகே வைகை அணை அமைந்துள்ளது. இந்த வைகை அணைப் பகுதியில் வலது கரை, இடது கரை எனப் பிரிக்கப்பட்டு இரண்டு பூங்காக்கள் அமைந்துள்ளன. இந்த வைகை அணை பூங்காவிற்கு குடும்பத்துடன் சென்று வருவதற்கும், குழந்தைகள் குஷியாக விளையாடுவதற்கும் ஏற்ற இடமாக உள்ளது. அணையின் இரண்டு புறங்களும் உள்ள பூங்காக்களில் ஏராளமான பொழுதுபோக்கு அம்சங்கள் உள்ளது. சிறுவர்கள் மகிழ்ந்து விளையாடுவதற்கு சிறுவர் பூங்கா, பெரியார் மாதிரி வைகை பூங்கா, மச்சக்கன்னி பூங்கா, பயில்வான் பார்க், யானை சறுக்கல், ஊஞ்சல்,

மலைகள் போல் அமைக்கப்பட்டு வரைபடங்கள், நீரூற்றுகள், புல் தரைகள், ஆங்காங்கே ஓய்விடங்கள், குழந்தைகள் குஷியாக சென்று வர உல்லாச ரயில், படகு குழாம், இசையுடன் தண்ணீர் நடனமாடும் வகையில் அமைக்கப்பட்டு இசை நடன நீரூற்று என ஏராளமான அம்சங்கள் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று வெயிலின் தாக்கம் அதிகரித்திருந்தால் வைகை அணை பூங்காவில் சுற்றுலா பயணிகளின் வருகை குறைந்து காணப்பட்டது. இதனால் வைகை அணை பகுதி களையிழந்து காணப்பட்டது.