Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பால் கொள்முதல் விலை உயருமா? கால்நடை வளர்ப்போர் எதிர்பார்ப்பு

தேவதானப்பட்டி, ஜூன் 19: தேவதானப்பட்டி பகுதியில் பால் உற்பத்தியை அதிகரிக்கவும், பால் கொள்முதல் விலையை உயர்த்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கால்நடை வளர்ப்போர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தேவதானப்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. மேலும் விவசாயத்திற்கு அடுத்தபடியாக கால்நடை வளர்ப்பு உள்ளது. கால்நடை வளர்ப்பில் பால் உற்பத்தி ஒருபுறம், ஆடுகள், கோழிகள் இறைச்சிக்காக வளர்ப்பது ஒரு புறம், கிடைமாடுகள் சானத்திற்காக(தொழுஉரம்) வளர்ப்பது ஒருபுறம் என நடைபெற்று வருகிறது. கிடைமாடுகள், எருமைகள், கறவைமாடுகள், வெள்ளாடு, செம்மறியாடு என ஒரு லட்சத்திற்கும் அதிகமான கால்நடைகள் தேவதானப்பட்டி பகுதியில் வளர்க்கப்பட்டு வருகிறது.