Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

தேனி, பெரியகுளத்தில் கனமழை

தேனி, மே 18: தேனி-வீரபாண்டி, பெரியகுளம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் அரை மணி நேரத்திற்கு மேலாக பெய்த நிலையில், வீரபாண்டியில் சித்திரை திருவிழாவில் பக்தர்கள் மற்றும் வியாபாரிகள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகினர்.

தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயில் தாக்கம் குறைந்திருந்தாலும், வெயிலின் புழுக்கம் கடுமையாக இருந்ததால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர். இந்நிலையில் நேற்று காலை முதல் தேனி மாவட்டத்தில் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. மதியம் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இதனைத்தொடர்ந்து மாலை தேனி மற்றும் வீரபாண்டியில் கனமழை பெய்தது. இதேபோல பெரியகுளம் மற்றும் இதன் சுற்றுவட்டார பகுதிகளான வடுகபட்டி, எ.புதுப்பட்டி, மேல்மங்கலம், ஜெயமங்கலம், ஆகிய பகுதிகளில் கனமழை பெய்தது. வீரபாண்டியில் கவுமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா நடந்து வரும் நிலையில் திருவிழா நடைபெறும் பகுதி முழுவதும் மழை நீர் தேங்கியது இதனால் பக்தர்கள் மற்றும் வியாபாரிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.