Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

தேவாரம் பகுதியில் முருங்கைக்காய் விலை கிடுகிடு

தேவாரம், ஜூன் 16: தேவாரம் பகுதியில் முருங்கைக்காய் விலை உயர்ந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தேவாரம், பண்ணைப்புரம், ராயப்பன்பட்டி, அனுமந்தன்பட்டி, தே.மீனாட்சிபுரம் ஆனைமலையன்பட்டி, அணைப்பட்டி மற்றும் அதன் சுற்றி உள்ள பகுதியில் கத்திரி, முள்ளங்கி, பீன்ஸ் உள்ளிட்ட காய்கறிகள் மற்றும் கீரை வகைகள் என குறுகிய காலத்தில் விளையும் பயிர்களை சாகுபடி செய்வதில் விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர். அதே வேளையில் கம்பம், தேவாரம், கூடலூர், சின்னமனூர், உத்தமபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 5 ஆயிரம் ஏக்கர் பரப்பரப்பில் முருங்கை சாகுபடி நடைபெற்று வருகிறது. கடந்த சில வாரங்களாக வெளிமாநிலங்களில் இருந்து முருங்கைக்காய் வரத்து குறைந்ததின் காரணமாக நல்ல விலை கிடைக்கிறது.

மேலும், வியாபாரிகள் நேரடியாக மார்க்கெட்களுக்கு முருங்கைகாய் கொண்டு செல்கின்றனர். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ஒரு கிலோ முருங்கைக்காய் ரூ.10 முதல் 15வரை விற்பனை ஆன நிலையில், தற்போது முருங்கைகாய் கிலோ ரூ.60 முதல் ரூ.90க்கு விற்பனையாகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், முருங்கைகாய்க்கு மார்க்கெட்டில் நல்ல விலை போகிறது. இனிவரும் காலங்களில், மேலும் விலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக கருதி தோட்டங்களுக்கே சென்று வியாபாரிகள் முன் பணம் கொடுத்து வருகின்றனர்’’ என்றனர்.