Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கம்பம் பகுதி ரேஷன் கடைகளில் தரமற்ற அரிசி விநியோகம்?

கம்பம், ஜூலை 14: கம்பம் பகுதிகளில் உள்ள பெரும்பாலான ரேசன் கடைகளில் தரமற்ற அரிசி விநியோகம் செய்யப்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.கம்பத்தில் இயங்கி வரும் பெரும்பாலான ரேஷன் கடைகளில் கடந்த சில தினங்களாக தரமற்ற அரிசி விநியோகம் செய்யப்பட்டு வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதன் காரணமாக விற்பனையாளர்களுக்கும், பொதுமக்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு வருகிறது. இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், \”ரேஞ்சர் ஆபீஸ் ரோடு, பார்க் ரோடு, மாலையம்மாள்புரம் உள்ளிட்ட பல பகுதிகளில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் அரிசி மாட்டுத்தீவனம் போல் வழங்கப்பட்டு வருகிறது. ஆகவே மாவட்ட நிர்வாகம் இதை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்\” என்றனர்.