போடி, டிச.10: போடி பகுதியில் புகையிலை பதுக்கிய இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.போடி நகர் காவல் நிலைய சார்பு ஆய்வாளர்கள் கிருஷ்ணவேணி, குரு கவுதம் ஆகியோர் தனித்தனியே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது போடி புதூர் டாஸ்மாக் கடை அருகே, போடி புதூர் காளியம்மன் கோயில் தெருவை சேர்ந்த முருகன் மகன் கோபி (18) அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பாக்கெட்களை பதுக்கி இருந்ததை பறிமுதல் செய்து கைது செய்தார்.
போடி இபி ஆபிஸ் சாலையில் உள்ள சுடுகாடு அருகே, போடி புதூரை சேர்ந்த சந்திரன் மகன் ரூபன்(21) என்பவரும் பதுக்கி வைத்திருந்த புகையிலை பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்து கைது செய்து வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.


