Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement Tafe

ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்டுத்தர கோரிக்கை

தேனி, ஜூலை 10: மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த 2 சென்ட் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்தவர்களிடமிருந்து நிலத்தை மீட்டு தர வலியுறுத்தி வயதான தம்பதியினர் கலெக்டரிடம் மனு அளித்தனர். பெரியகுளம் பகுதியைச் சேர்ந்த முதியவர்கள் விஸ்வம் மற்றும் மகேஸ்வரி தம்பதியினர். இவர்கள் தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து கோரிக்கை மனுவினை கலெக்டர் வைத்தியநாதனிடம் அளித்தனர். அந்த மனுவில், ‘‘பெரியகுளம் பகுதியில் எனது மனைவி பெயரில் இரண்டு சென்ட் நிலத்தை வாங்கி பட்டா மாறுதல் பெற்றுள்ளேன். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த ஒருவர் இவரது இரண்டு சென்ட் நிலத்தினை ஆக்கிரமிப்பு செய்யும் நோக்கத்தோடு செயல்பட்டு வருகிறார்.