தேனி, செப். 8: தேனி அருகே வட புதுப்பட்டியில் உள்ள நாடார் சரஸ்வதி கலை அறிவியல் கல்லூரியில் தேனி மேலப்பேட்டை இந்து நாடார் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட அனைத்து கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் ஆசிரியர்கள், ஆசிரியைகள் கலந்து கொண்ட ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது. விழாவில் கலந்து கொண்டவர்களை, தேனி மேலப்பேட்டை இந்து நாடார் உறவின்முறை பொதுச் செயலாளர் எம்எம்.ஆனந்தவேல் வரவேற்று வாழ்த்தி பேசினார். விழாவிற்கு உறவின்முறை தலைவர் தர்மராஜன் தலைமை தாங்கினார். உப தலைவர் ஜீவகன், பொருளாளர் ராமச்சந்திரன் முன்னிலை வகித்தனர்.
விழாவில், நாடார் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட கல்வி நிறுவனங்களான நாடார் சரஸ்வதி தொடக்கப்பள்ளி நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி, ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளிகள், முத்துத்தேவன்பட்டி மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி, என்எஸ் வித்தியாலயா, நாடார் சரஸ்வதி பெண்கள் தொழிற் பயிற்சி பள்ளி, வடபுதுபட்டியில் உள்ள நாடார் சரஸ்வதி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, பப்ளிக் மேல்நிலைப்பள்ளி, நாடார் சரஸ்வதி கலை அறிவியல் கல்லூரி, நாடார் சரஸ்வதி பொறியியல் கல்லூரி ஆகிய கல்வி நிறுவனங்களை சேர்ந்த ஆசிரியர்கள் பேராசிரியர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
விழாவில் ஆசிரியர்களுக்கான அறிவுத்திறன், படைப்பாற்றல், பேச்சு உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டு, பரிசுகள் வழங்கப்பட்டது முடிவில் இக்கல்லூரியின் செயலாளர் ராதாகிருஷ்ணன் நன்றி கூறினார்.


