Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

விவசாய டாக்டிக்ஸ் கார்டு திட்டம் தேனியில் அறிமுகம்

தேனி, ஜூலை 8: விவசாயிகளும், விவசாய குடும்பத்தினரும் மருத்துவ சேவைகளை சலுகை கட்டணத்தில் பெறும் வகையில் டாக்டிக்ஸ் விவசாயிகள் ஆரோக்ய அட்டை திட்டம் தேனியில் அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டத்தில், விவசாயிகளும் அவர்களது குடும்பத்தினரும் இணைந்துள்ள மருத்துவமனைகளில் வெளிநோயாளர் மற்றும் உள்நோயாளர் சிகிச்சை, மருத்துவர் ஆலோசனை, ஆய்வகப் பரிசோதனைகள், ஸ்கேன் சேவைகள், மருந்துகள் உள்ளிட்ட பல்வேறு மருத்துவ சேவைகளில் சிறப்பு சலுகைகளைப் பெற முடியும். இதன் மூலம் விவசாயக் குடும்பங்களின் மருத்துவச் செலவைக் குறைத்து, தரமான சுகாதார சேவைகளை அனைவரும் எளிதில் பெறும் வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில் கீர்த்தி சக்ரா விருது பெற்ற லான்ஸ் நாயக் மீனாட்சி சுந்தரம் கலந்து கொண்டு, திட்டத்தை அறிமுகப்படுத்தினார். விழாவில் ஆரோக்ய அட்டை நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி தங்கராஜ், தலைமை செயல்பாட்டு அதிகாரி சகாய பிச்சை, இயக்குநர் முருகேசன், தலைமை சந்தைப்படுத்தல் அதிகாரி செண்பக விநோத், மற்றும் மார்க்கெட்டிங் மேலாளர் சேதுபதி ஆகியோர் கலந்து கொண்டு, விவசாயிகளின் மருத்துவ பாதுகாப்பு மற்றும் சுகாதார விழிப்புணர்வின் அவசியம் குறித்து பேசினர்.