Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

குளத்தில் மீன்பிடிக்க சென்ற இளைஞர் தண்ணீரில் மூழ்கி பலி

கூடலூர், ஜூன் 8: கூடலூர் ஒட்டான்குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இளைஞர், தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். கூடலூர் எம்ஜிஆர் காலனியை சேர்ந்த ராசாவின் மகன் அனீஸ் (34). கூலி தொழிலாளி. இவர், நேற்று காலை கூடலூரில் உள்ள ஒட்டான்குளத்திற்கு சென்று கரையில் இருந்து மீன் பிடித்துக் கொண்டிருந்ததாகவும், அப்போது திடீரென கால் தவறி தண்ணீருக்குள் விழுந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. மீன் பிடிக்கச் சென்ற அனீஸ் நீண்ட நேரமாக காணவில்லை என்பதால் ஒட்டான் குளத்திற்கு வந்த உறவினர்கள் குளத்திற்குள் அனிஸ் விழுந்திருக்கலாம் என எண்ணி அங்கிருந்தவர்கள் உதவியுடன் குளத்தில் இறங்கி தேடியுள்ளனர்.

அப்போது அவர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்டுள்ளனர். இது குறித்து கூடலூர் தெற்கு காவல் நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அங்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கம்பம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிந்து, விசாரணை செய்து வருகின்றனர்.