Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

மேகமலை மக்களுக்கு ஆதரவாக வழக்கறிஞர்கள் இன்று கோர்ட் புறக்கணிப்பு

தேனி, செப். 7: வருசநாடு அருகேயுள்ள மேகமலை கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கு ஆதரவாக இன்று (செப்.7) நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபடுவதாக, தேனி வழக்கறிஞர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது. தேனி வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பில், மேகமலை பகுதியில் உள்ள கிராமங்களில் நீண்ட காலமாக வசிப்பதுடன், விவசாயம் செய்து வரும் மக்களை அங்கிருந்து வெளியேற்றுவது தொடர்பான செயற்குழு கூட்டம் வாய்ஸ் கால் மூலமாக நடத்தப்பட்டது. கூட்டத்திற்கு சங்கத் தலைவர் சந்தானகிருஷ்ணன் தலைமை தாங்கினார். செயலாளர் செல்வகுமார் முன்னிலை வகித்தார். இதில் வழக்கறிஞர் சங்க பொறுப்பாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

வனப்பகுதியில் நீண்ட நாட்களாக குடியிருந்து விவசாயம் செய்து வரும் பொது மக்களை அங்கிருந்து வெளியேற்றக்கூடாது என வலியுறுத்தி இன்று (செப்.7) தேனி வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபடுவது எனவும், இன்று காலை 10 மணிக்கு தேனி மாவட்ட நீதிமன்றம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது. இப்பிரச்னையில் அடுத்தகட்ட போராட்டம் தொடர்பாக இன்று நிர்வாகிகளுடன் ஆலோசித்துமுடிவு எடுக்கப்பட உள்ளது. இப்பிரச்னைக்கு சட்ட ரீதியான தீர்வு காண,. தேனி வழக்கறிஞர்கள் சங்கம் ஆதரவு அளிக்கும் என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.