Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

ஏடிஎம்மில் உதவுவது போல முதியவரிடம் இருந்து ரூ.47 ஆயிரம் மோசடி

தேனி, செப். 7: பெரியகுளத்தில் ஏடிஎம்மில் பணம் எடுக்க உதவுவதுபோல நடித்து முதியவரிடம் ரூ.47 ஆயிரம் திருடியவரை போலீசார் தேடி வருகின்றனர். பெரியகுளம் அருகே எ.புதுப்பட்டி கிழக்குத் தெருவில் குடியிருப்பவர் மாயாண்டி (73). இவர் கடந்த மாதம் 27ம் தேதி பெரியகுளம் நகர் தென்கரையில் உள்ள ஏடிஎம் மையத்திற்கு பணம் எடுக்க சென்றார். அப்போது அங்கிருந்த அடையாளம் தெரியாத நபர், மாயாண்டியிடம் பணம் எடுக்க உதவுவதாக கூறியுள்ளார்.

இதையடுத்து மாயாண்டி தனது ஏடிஎம் கார்டை அவரிடம் கொடுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அந்த நபர் ஏடிஎம் கார்டை பெற்று ரூ.47 ஆயிரத்தை மோசடியாக எடுத்துச் சென்றுவிட்டார். இது குறித்து மாயாண்டி பெரியகுளம் தென்கரை போலீசில் புகார் அளித்தார். இதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, மோசடியாக பணத்தை எடுத்துச் சென்ற மர்ம நபர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.